Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு கேள்விகளும் பதில்களும்

1. ஊவா மாகாணத்தில் இடமாற்றத்தைப் பெறுவது எப்படி?

பிரதம செயலகத்தினால் வருடாந்தம் இடமாற்றத்தை வழங்குவதற்காக பொது நிருவாகச் சுற்றறிக்கை 25 / 91 இன் பிரகாரம் 06 பிரதிகளைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர் ஊடாக பிரதம செயலாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றத்திற்கான விண்ணப்பப்பத்திரங்கள் கிடைத்தல்.
  2. தேவையான எண்ணிக்கையுடைய பிரதிகள் உள்ளனவா என்பதை பரிசீலனை செய்தல்.
  3. நிறுவன தலைமையதிகாரிகளின் விதப்புரைகளுடன் உள்ளனவா என்பதைப் பரிசீலனை செய்தல்.
  4. பிரதம செயலாளரது விதப்புரையுடன் அரசசேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தல்.
  5. இணக்கம் கிடைத்த பின்னர் உத்தியோகத்தரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்.

வருடாந்த இடமாற்றத்துக்காக

  1. வருடாந்த இடமாற்ற விண்ணப்பப் பத்திரங்களைக் கோருதல்.
  2. சேவைக் காலத்திற்கிணங்க இடமாற்ற விண்ணப்பப்பத்திரங்களைப் பிரித்தல்.
  3. ஒரே கடமை நிலையத்தில் 05 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டிருத்தல்.
  4. ஆவணப்படுத்துதல்.
  5. இடமாற்ற சபைக்கு அழைப்பு விடுத்தல்.
  6. இடமாற்றத்தை வழங்க பொருத்தமான உத்தியோகத்தர்களைப் பெயர்குறித்தல்.
  7. இடமாற்றக் கடிதங்களை அனுப்பி வைத்தல்.
  8. மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல்.
  9. மேன்முறையீட்டுச் சபைக்கு அழைப்பு விடுத்தல்.
  10. அதற்கான முடிவினை எடுத்தல்.
  11. மீண்டும் இடமாற்றத்தை அமுலாக்குதல்.


2. வெளிநாடு செல்வதற்காக லீவு பெறுவது எப்படி?

  1. வெளிநாட்டு லீவு அங்கீகரித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சரினதும் அமைச்சு செயலாளரினதும் விதப்புரையுடனான லீவு விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்தல்.
  2. வெளிநாட்டு விஜயத்துக்காக கௌரவ ஆளுநரின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைத்தல்
  3. வெளிநாட்டு விஜயத்துக்காக கௌரவ ஆளுநரின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் வெளிநாட்டு லீவுகளை அங்கீகரித்தல்.
  4. வெளிநாட்டு கல்வி விஜயம் நிறைவடைந்த பின்னர் ஒரு மாதகாலப்பகுதிக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல்.

வெளிநாட்டுப்பயண லீவினை அங்கீகரிப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.

வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறியில் கலந்துகொள்வதற்காக

  • வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிக்கான அழைப்புக் கடிதம்.
  • பொது 126 மாதிரிப்படிவம் 03 பிரதிகள்.
  • 16 வது பிற்சேர்க்கையின் 03 பிரதிகள்.
  • கடமையையும் உள்ளடக்கிப் புரிவதற்கான இணக்கம் தெரிவிக்கும் கடிதம்.
  • ஒரு மாதத்துக்கு மேலாக வெளிநாட்டில் இருப்பின் தாபன விதிக்கோவையின்படியான உடன்படிக்கை.
  • (8 வது பிற்சேர்க்கை) XII வது அத்தியாயத்தின் 14.4 இன் பிரகாரமும் XV வது அத்தியாயத்தின் 4:12 இன் பிரகாரமும் முழுச்சம்பளத்துடனான கல்வி லீவு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் கையொப்பமிட வேண்டிய உடன்படிக்கை.
  • (9 வது பிற்சேர்க்கை) XII வது அத்தியாயத்தின் 16:5 இன் பிரகாரமும் XV வது அத்தியாயத்தின் 5:1 இன் பிரகாரமும் சம்பளமற்ற கல்வி லீவு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் கையொப்பமிடவேண்டிய உடன்படிக்கை.
  • (11 வது பிற்சேர்க்கை) XII வது அத்தியாயத்தின் 16:5 இன் பிரகாரம் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரட்டை நோக்கங்களுக்காக சம்பளமற்ற லீவு வழங்கப்படுகின்ற உத்தியோகத்தர்கள் கையொப்பமிடவேண்டிய உடன்படிக்கை.
  • தகுதிகாண் காலப்பகுதியில் உள்ள உத்தியோகத்தரெனில் தாபனவிதிக்கோவையின் XV வது அத்தியாயத்தின் 4:12 இன் பிரகாரம் முறி (15 வது பிற்சேர்க்கை)

தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்தில் பங்கேற்பதற்காக

  • பொது 126 மாதிரியின் 03 பிரதிகள்.
  • கடமையையும் உள்ளடக்கிப் புரிவதற்கான இணக்கம் தெரிவிக்கும் கடிதம்.
  • ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் இருப்பின் தாபன விதிக்கோவைக்கிணங்க உடன்படிக்கை.
  • (10 வது பிற்சேர்க்கை) XII வது அத்தியாயத்தின் 16:5 இன் பிரகாரம் வெளிநாட்டுச் சம்பளம் பெறுகின்ற கரும ஒப்படைக்காக / வெளிநாட்டில் தொழிலொன்றைப் பொறுப்பேற்பதற்காக சம்பளமற்ற லீவு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் கையொப்பமிட வேண்டிய / லீவு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் கையொப்பமிடவேண்டிய உடன்படிக்கை.

வெளிநாட்டு லீவு அங்கீகரிப்புச் செயற்பாடு

வெளிநாட்டு லீவு அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் கிடைத்த பின்னர்,

  • மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் சரியான முறையில் உள்ளவையாவென ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.
  • பொது 126 மாதிரியின் வெளிநாட்டு லீவுக்கான விதப்புரை சரியாக இடம்பெற்றுள்ளதாவென பரிசீலனை செய்தல் வேண்டும்.
  • ஏற்புடைய உடன்படிக்கை சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு உரிய வகையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாவென பரிசீலனை செய்தல்.

உடன்படிக்கையில் கையொப்பத்தின் கடப்பாடுடைய உத்தியோகத்தர்கள்.

  • நாடளாவிய சேவையின் உத்தியோகத்தர்கள் - ஊவா மாகாண பிரதம செயலாளருடன்
  • ஏனைய உத்தியோகத்தர்கள் - அமைச்சு செயலாளருடன்
  • அமைச்சின் கீழ் கொள்ளப்படாத உத்தியோகத்தர்கள் - ஊவா மாகாண பிரதம செயலாளருடன்.

 

  • இவ் விடயங்கள் முழுமையாக இருப்பின் வெளிநாட்டு விஜயத்துக்காக கௌரவ ஆளுநரின் அனுமதியைப் பெறுவதற்கான கடிதத்தைத் தயாரிக்க பிரதம செயலாளரின் அனுமதியைப் பெறுதல்.
  • பிரதம செயலாளரின் அனுமதி கிடைத்த பின்னர் கௌரவ ஆளுநரின் அனுமதியைப் பெறும்பொருட்டு சம்பந்தப்பட்ட கடிதம் ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பப்படல்.
  • வெளிநாடு செல்வதற்காக கௌரவ ஆளுநரின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் வெளிநாட்டு லீவுக்கான விண்ணப்பப் பத்திரத்தை பிரதம செயலாளரது அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பித்தலும், அங்கீகாரம் கிடைத்த பின்னர் லீவுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அறிவித்தலும்.

3. ஊவா மாகாண சபையினால் நடாத்தப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சிகளில் எவ்வாறு கலந்துகொள்வது?

ஊவா மாகாணத்தின் பிரதம செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் அமைச்சுக்களுக்கும் திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்படும். அதற்கிணங்க ஏற்புடைய நிறுவனங்களினால் உத்தியோகத்தர்கள் பெயர் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் பயிற்சி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுவதுடன் தெரிவு செய்யப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும்.

 
டிசெம்பர் 2018
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5